பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


​செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கும் 3 நாள் வங்கி வேலை நிறுத்தம் மற்றும் வாராந்திர விடுமுறைகள் காரணமாக, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை உள்ள 9 நாட்களில் 2 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் எனத் தெரிகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​அகில இந்திய அளவிலான வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாளாக அமல்படுத்தப்பட வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் நியாயமான முறையில் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) வழங்கப்பட வேண்டும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துடன் வழக்கமான வார விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் தொடர்ச்சியாக வருவதால் வங்கிச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 26 ம் தேதி 4-வது சனிக்கிழமை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும், 28 29 30 ஆகிய மூன்று நாட்கள் வங்கி வேலை நிறுத்தம், அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மட்டுமே வங்கி இயங்கும். இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை, 3ஆம் தேதி சனிக்கிழமை, நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

தொடர் விடுமுறை மற்றும் வேலைநிறுத்தம் காரணமாக ஏடிஎம் (ATM) மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படவும், காசோலை பரிவர்த்தனைகள் தாமதமாகவுமே வாய்ப்புள்ளது. எனினும், இணைய வங்கிச் சேவை (Net Banking) மற்றும் யுபிஐ (UPI) சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed