ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் சென்று அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் தமிழக முதல்வரின் வாழ்த்து மடலை வழங்கினார். மேலும் அங்கு பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கேக்கை ஊட்டி விட்டு அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். பின்பு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

பள்ளியில் உள்ள சமையலறைக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்த ஆய்வு செய்தார். அப்பொழுது அவருடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஊர் பொது மக்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 893947677
