மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான சி எஸ் ஐ தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது இவ்விழாவிற்கு பொறுப்புதலைமை ஆசிரியை பிரேமா அன்னபுஷ்பம் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் மற்றும்முன்னாள் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆசிரியை திவ்யா வரவேற்றார் பள்ளி நிர்வாகி எபினேசர் துரைராஜ் குழந்தைகள் தினவிழா பற்றி பேசி குழந்தைகளுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்ட கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி யோகா டாக்டர் ராஜேஸ்வரி அனைவருக்கும் கல்வி ஆசிரியர் சரண்யா சித்தா மருந்தாளர் பாலசுப்ரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் ஆசிரியர்கள் பிரம குமாரி மருத்துவ பணியாளர் கலைச்செல்விமற்றும் பணியாளர்கள் ஆகியோர் குழந்தைகள் தின விழா பற்றி சிறப்புரை ஆற்றி பேசினார்கள்.

உதவி ஆசிரியை ஏஞ்சல் சுகந்தி நன்றி கூறினார். தொடர்ந்து மாணவ – மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed