விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் Coffee with அமைச்சர் – மக்களின் குறைகளை அமைச்சர் நேரில் கேட்டு தீர்வு காணும் புதிய நிகழ்ச்சி துவக்கப்பட்டுள்ளது…

பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தகுந்த தீர்வுகளை விரைந்து வழங்கும் நோக்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி ‘Coffee with அமைச்சர்’ என்ற புதிய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளார். அரசுக்கும் ,பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே பொதுமக்கள் தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் தேவைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்ததற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவது தான். இதன் மூலம் இடையில் யாரும் இல்லாமல் தேவையற்ற நீண்ட செயல்முறைகளைத் தவிர்த்து, மக்கள் தங்களது குறைகள் எதுவாயினும் நேரடியாக அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஓர் எளிமையான வழி இந்த நிகழ்ச்சி.

இதற்காக Jadeshwari.in என்ற இணையதளத்தின் வாயிலாகப் பொதுமக்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து, இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் பொதுமக்களிடம் அவர்களுக்கு ஏற்ற வசதியான நேரம் குறித்தும் கேட்டறியப்பட்டு, பொதுமக்களின் அன்றாடப் பணிகள் மற்றும் தனிப்பட்ட சூழல்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏதுவான நேரத்தில் அமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச் சந்திப்பின் போது பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை அமைச்சர் நேரடியாகக் கேட்டறிவார், குறைகளின் தன்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவற்றுக்கான தீர்வுகளை நோக்கியும் நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படுகின்றன.

செய்திகள் : ராமகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed