காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் எஸ். பிரபாகர் அவர்கள் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட தீபாவளி கால சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை.

​​​இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் நம்ப முடியாத அளவுக்குக் குறைவான விலைத் தள்ளுபடி (Huge Discounts) மற்றும் கவர்ச்சிகரமான பட்டாசு விளம்பரங்களை நம்பி ஆன்லைனில் பணம் செலுத்தி பட்டாசுகளை வாங்குவதைத் தவிர்க்கவும். இவை பெரும்பான்மை போலியானவை.

​​இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆடைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பல்வேறு விற்பனை விளம்பரங்களை நம்பி ஆன்லைன் ஆர்டர்கள் செய்வதோ அல்லது முன்பணம் செலுத்துவதோ வேண்டாம்.

​ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதாக இருந்தால், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), மீஷோ (Meesho) போன்ற பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இ-காமர்ஸ் தளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
​அவசர உதவி எண்கள் மற்றும் புகாரளிக்கும் முகவரி
​சைபர் உதவி எண்: ஏதேனும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

​இணையவழி புகார் பதிவு:

பொதுமக்கள் தங்களது புகார்களை www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
​பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் ஏமாற வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
​

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed