காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் J. தாமஸ் இளங்கோவன் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கோரிக்கை ஆர்பாட்டத்தில்,
அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் 6,750 ரூபாய்யும் , குடும்ப நலநிதி 50,000 ரூபாய்யும் ,பண்டிகை முன்பணம் 10,000 ரூபாய்யும் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு தேசிய மருத்துவக் காப்பீடும் ,10, முதல் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கான ஊக்க ஊதியமும் வழங்க வேண்டும்.


அரசாணை எண். 41-ன்படி முன் ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப ஓய்வூதியமும், பதவி உயர்வில் சென்ற உயர்நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7,850 அல்லது அரசாணை. 41-ன்படி சிறப்பு ஓய்வூதியமாக 3,400 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட மேற்கண்ட 10 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஓய்வூதிய ஊழியர்கள் திரண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
பேட்டி தாமஸ். மாவட்ட தலைவர்
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி . இன் / 8939476777
