திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சிருளப்பாக்கம் ஊராட்சியில் கால்நடைத்துறைக்கு சொந்தமான அரசு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை அப்பகுதியில் உள்ள சிலர் கால்நடை துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

அரசு மெய்க்கால் புறம்போக்கு பாட்டை புறம்போக்கு உள்ளிட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் இதனை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.
அதனை ஏற்று, பெயரளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறி சரியாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டு சென்றுள்ளனர்.

மேலும், இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதத்தில் பெயர் பலகையும் வைத்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெயரளவுக்கு செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பணியினில் திருப்தி இல்லை எனவும் முற்றிலுமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
