தமிழ்நாடு பத்திரம் – நகல் எழுதுவோர் சங்கம் (கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஆவண எழுத்தாளர்கள்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் star 3.0 இ-டெண்டர் முறையைக் கண்டித்தும், star 3.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது

மேலும், காகிதமில்லா மற்றும் நேரில் வரத் தேவையில்லாத ,பதிவு நடைமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பத்திரம் நகல் எழுதுவோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி பத்திர பதிவு ஆவண எழுத்தாளர் சந்திரப்பா தலைமையில் சின்னப்பன், வெங்கடேசப்பா, ராஜூ, வழக்கறிஞர் வடிவேல், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன், சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
