ராசி மணல் பகுதியில் அணைக்கட்ட கர்நாடகா விவசாயிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர் – கிருஷ்ணகிரியில் பி ஆர் பாண்டியன் பேட்டி…

மேகதாது அணை கட்டுமானத்தை. தடுத்திடுவோம் ராசி மணல் அணை கட்ட திட்டமிடுவோம், தமிழகத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுப்போம் என்கிற நோக்கில் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி ஆர் பாண்டியன் தலைமையிலான பிரச்சார பயணம் கடந்த 20 ஆம் தேதி பூம்புகாரில் துவங்கியது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் இந்த பிரச்சார பயணத்தில் இன்று கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த பி.ஆர், பாண்டியன் அவர்களுக்கு தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் விவசாயிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.



பின்னர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய பி ஆர் பாண்டியன்..
கர்நாடக அரசு கழிவு நீரை சுத்திகரிக்காமல் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விட்டதாக தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. கர்நாடக முதலமைச்சரையும் நீர்வளத்துறை அமைச்சரையும் வன்மையாக கண்டிக்கிறோம். காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்காமல் அணையை மூடி வைத்திருக்கிறது.

இந்த பிரச்சனையில் தமிழக அரசு சட்டப்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்பது சரியாகும். அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தி அதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தீர்வாகாது, சட்டப்படி மட்டுமே தீர்வு காண முடியும். தேவை ஏற்பட்டால் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் அனைத்து கட்சி கூட்டம் நடத்தலாம் என தெரிவித்த பி ஆர் பாண்டியன்..

மேலும் மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. பெங்களூர் குடிநீர் பிரச்சனைக்கு மட்டும்தான் தேவைப்படும் ஆனால் தமிழகத்தில் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் கர்நாடக அரசு பயன்பெறும் தமிழக அரசும் பயன்படும்.

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே சமயம் ராசிமணலில் அணைக்கட்ட கர்நாடக விவசாயிகள் ஆதரவு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு அளித்துள்ளனர், எனவே தமிழக அரசு காமராஜர் ஆட்சி காலத்தில் ராசி மணலில் அணைக் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அங்கு அணை கட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியை தொடர்ந்து பிரச்சார பயணம் வேலூர் வழியாக நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி சார்ந்த பிரதிநிதிகள் நிர்வாகிகள் பங்கேற்பதாக பிஆர் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed