ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிபட்டினம் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் பள்ளி மாணவர், மாணவியருகளுக்கு கேக்குகள் , குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ' தொழிலாளர் நலத்துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் மா.வள்ளலார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் (தெற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 97 மாணவர்கள், 94 மாணவியர்கள் என மொத்தம் 191 பேர் மாணவர் மாணவிகள், வாழ்த்து அட்டைகள், 7 ஆசிரியர்களுக்கு கேக்குகளும், அதே வளாகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 207 மாணவர்களும், 8 மாணவர்களும், காந்திநகர் பள்ளி மாணவர்களும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.சு.ராஜீவ் வழங்கினார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.கூ.ராஜீவ் தெரிவித்ததாவது :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர், மாணவியர்களுக்கு கேக்குகள் , குழந்தைகளுக்கு தின வாழ்த்து அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பரமக்குடி கிடங்கின் மூலம் போகலூர் , பரமக்குடி வட்டாரங்களில் உள்ள 178 பள்ளிகளுக்கு 20,813 கேக்குகளும், கடலாடி கிடங்கின் மூலம் கடலாடி வட்டாரத்தில் உள்ள 172 பள்ளிகளில் 16,838 கேக்குகளும், கமுதி கிடங்கின் மூலம் கமுதி வட்டாரத்தில் உள்ள 164 பள்ளிகளுக்கு 15,202 கேக்குகள், கீழக்கரை 7 13,100 கேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.


முதுகுளத்தூர் கிடங்கின் மூலம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள 121 பள்ளிகளுக்கு 8,702 கேக்குகளும், ராமநாதபுரம் கிடங்கின் மூலம் நயினார்கோவில் , ராமநாதபுரம் வட்டாரங்களில் உள்ள 184 பள்ளிகளுக்கு 19,518 கேக்குகளும், ராமேஸ்வரம் கிடங்கின் மூலம் மண்டபம் வட்டாரத்தில் உள்ள 132 பள்ளிகளுக்கு 21, 880 கேக்குகளும், இராஜசிங்கமங்கலம் ஆர்.எம்.சி. கிடங்கின் மூலம் இராஜசிங்கமங்கலம் வட்டாரத்தில் உள்ள 107 பள்ளிகளுக்கு 6,049 கேக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 9 கிடங்குகளின் வாயிலாக 1,292 பள்ளிகளுக்கு மொத்தம் 1,34,812 கேக்குகள் வழங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.கு.ராஜீவ் தெரிவித்தார்.

பின்னர் தேவிபட்டினம் அங்கன்வாடி மையத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வே.க.ராஜீவ் இனிப்பு பொங்கல் உணவு அருந்தினார்.

நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிக்குமார் , ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் , முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பால தண்டாயுதபாணி, செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed