ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையங்குளம் பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் தடைபட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறும் குடிநீருக்கான மாற்றி ஏற்பாடை செய்து தராததால், இந்த பகுதி மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தனர். பலமுறை முறையிட்டும் தங்களுடைய பகுதிக்கு குடிநீர் கிடைக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாததால், ஆத்திரமடைந்த இடையன் குளம் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து காலி குடங்களுடன் மம்சாபுரம் – ராஜபாளையம் சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நேரடியாக வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதற்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed