மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மிகவும் முக்கியமானது இந்த ஆடி பெருந்திருவிழா கடந்த 21 ம் தேதி அன்று காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது .
அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தினமும் காலையில் தங்க பல்லக்கு புறப்பாடும் நடந்தது இதில் தினமும் சிம்மம், அனுமார் கருடன் சேஷ யானை தங்க குதிரை போன்ற வாகனங்களில்
இரவு சகல பரிவாரங்களுடன் எழுந்தருளி புறப்பாடு நடந்தது.

இதில் , இன்று தயார் நிலையில் உள்ள சுமார் 60 அடி உயரமுள்ள திருத்தேரின் நான்கு புறமும் அலங்கார வண்ண திரை சேலைகளையும் தொங்கு வடிவ அமைப்புகளும் சிரசு அலங்காரமும் இணைத்து கட்டப்பட்டிருந்தது.
இன்று காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்ட திருவிழா காலை 7.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து ஏராளமான பத்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை 30 ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும். 31 ம் தேதி உற்சவ சாந்தி நடைபெறும்.

இந்த வருடம்ஆடி அமாவாசை தேரோட்டத்திற்கு பிறகு வருகிறது ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. இத்துடன் ஆடி பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed