விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு சேலை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம், வேலை இழப்புக்கு நிவாரணம், இருப்பில் உள்ள பழைய சேலை கொள்முதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கஞ்சி தொட்டி, சாலை மறியல், பிச்சை எடுக்கும் போராட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 22-ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் நெசவாளர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர் அவர்களை காந்தி சிலை முன் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், ரயில்வே பீடர் சாலையில் நெசவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நெசவாளர்கள் போராட்ட குழுவினர் உடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏ.எஸ்.பி சைண்டேன் ஸ்வப்நிலா அனில். வட்டாட்சியர் ராஜிவ்காந்தி, கைத்தறி துறை உதவி இயக்குநர் சேரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் புதிய ரக சேலைக்கு ரூ.250 கூலி நிர்ணயம் செய்ய கோரி வலியுறுத்தி உள்ளோம். கூலி நிர்ணய குழுவிலும் அதே கோரிக்கையை தெரிவித்துள்ளோம். இரு நாட்களில் கூலி நிர்ணயித்து அறிவிக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நெசவாளர்கள் வசம் உள்ள பழைய சேலைகள் கொள்முதல் ரூ.202 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.
29 கூட்டுறவு சங்கங்களில் இருப்பில் உள்ள 1,44,424 சேலைகள் கொள்முதல் செய்யப்படும்.

புதிய ரக சேலை உற்பத்திக்கு தறிகளில் செய்யும் மாற்றத்துக்கு ஆகும் செலவுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். அந்த நிதியை அரசு வழங்கும். 5 மாத வேலை இழப்புக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்குவது குறித்து வழிவகை இல்லை. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, ஆகிய 4 கோரிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கைத்தறி துறை உதவி இயக்குனர் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் போராட்ட குழு தலைவர் சிவலிங்கம், தலைமையில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து நெசவாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மூன்று மணி நேரம் அந்த பகுதி பரபரப்பு நிலவியது எடிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிடத்து டிஎஸ்பி ரமேஷ் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed