ஆடிமாத குரு பவுர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆலாடு சிவபுரம் ஸ்ரீ சாய் மந்திர் எனப்படும் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில் முழுக்க முழுக்க மலர் தோரணங்கள், பாபாவின் சன்னதி வரை சுமார் 1 இலட்சம் மலர்களால் ஆன அலங்காரம் என ஆலயம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூன்று கால பூஜைகளாக பாலாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது.

பொன்னேரி சுற்றுவட்டாரம் ,சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் சுவையான அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed