கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி கறவை மாடுகள் மற்றும் பால் கேனுடன் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள போதாபுரம் கிராமத்தில் தமிழக எழுச்சி விவசாயிகள் சங்கம் மற்றும் ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய, மாநிலஅரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக எழுச்சி விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமையில், செயலாளர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் முன்னதாக போதாபுரம் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக சென்று விவசாயிகள் பால் கொள்முதல் நிலையம் முன்பு கறவை மாடுகள் மற்றும் பால் கேனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பசும்பால் லிட்டருக்கு 45 ரூபாயும், எருமைப்பால் லிட்டருக்கு 55 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,
கறவை மாட்டுக்கு காப்பீடு தொகையை 100% இலவசமாக வழங்க வேண்டும், தனியாருக்கு நிகராக ஆவின் பால் விலையை உயர்த்தி தர வேண்டும், பாலுக்கான ஊக்கத்தொகை மூன்று ரூபாயில் இருந்து லிட்டருக்கு ஏழு ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்,
தீவன விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்,….
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தின் பேது தமிழக எழுச்சி விவசாய சங்கத்தினை சேர்ந்த சங்கர், வெங்கடேசன்,ராஜ்குமார், கஜேந்திரன்,வேலு, அண்ணாமலை, திருப்பதி, முத்து, கோத்திராஜ், லட்சுமணன், குச்சனூர் வேலு, முருகன், வெற்றி, சக்தி கவுண்டர், மாது, சின்னசாமி, உதயகுமார், முருகன், சின்னத்தாள், ஷோபா, தனலட்சுமி, இந்திரா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு கோரிக்கை முழக்கமிட்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777
