கிருஷ்ணகிரி குப்பம் சாலை சாலையில் மருத்துவக்கழிவுமற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி மலைப்போல தேங்கி உள்ளதால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம். மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை டிராக்டர்கள் மூலமாக எடுத்து வரப்படும் குப்பைக் கழிவுகளை கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் குப்பைகள் மலைபோல தேங்கி உள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகளை மூட்டை முட்டையாகக் கட்டி சாலை ஒரங்களில் கொட்டி விட்டு செல்வதால் பெரும் தூர் நாற்றம் வீசுகிறது,
இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், சாலை மார்க்கமாக நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தொற்றுநோய் மற்றும் டெங்கு காய்ச்சலும், ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதிகளில் குடியிருந்து வரும் மக்களுடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் பூபால் …
கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்வதனால் சாலையில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் ஏற்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளாக ஒரேஇடத்தில் குப்பைகளை கொட்டப்பட்டு வருவதால் நிலத்தடி நீரும் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களும் வேகமாக பரவி வருகிறது. ஆகையால் மலைபோல் தேங்கி உள்ள இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777
