விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் சார்பில் சர்வதேச புலிகள் தினம் ராஜபாளையத்தில் நடத்தப்பட்டது ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்ட புலிகள் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி, ஏகேடி தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

மேகமலை புலிகள் சரணாலய துணை இயக்குனர் ரவி மீனா தலைமையில் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் முகமது இர்பான் மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். ராஜபாளையம் வனச்சரக அலுவலர் அன்பரசி, வனவர்கள் கனகராஜ், விக்னேஷ், பெரியசாமி மற்றும் ராஜபாளையம் பிரமுகர்கள் டைகர் ஷம்சுதீன், என்.ஏ. ராமச்சந்திர ராஜா உள்பட சமூக ஆர்வலர்களும் இதில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் ஐந்து புள்ளிகள் சரணாலயம் அமைந்துள்ளதாகவும் ஐந்தாவதாக சிறுவழிவுத்துறை தலைமை இடமாகக் கொண்டு மேகமலை புலிகள் சரணாலயமும் அமைந்து அமைந்துள்ளது. மொத்தம் 3,682 புலிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் மேலும் தமிழக வனப்பகுதிகள் அதிகமாக பாதுகாக்கப்பட்டு வருவதால் புலிகள் எண்ணிக்கை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவ மாணவியர் புலிகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களையும் எழுப்பினார்கள். பின்னர் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச புலிகள் தினத்தில் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி இயற்கை மன்றம் மற்றும் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கல்லூரி கருத்தரங்க அரங்கில் விழா நடைபெற்றது.

உதவி வனப் பாதுகாவலர் பி. ஞானப்பழம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ராமகிருஷ்ணன் விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேகமலை புலிகள் காப்பக விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. ரோட்டரி சங்கம் ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி தலைவர் அபிநவ் அறிமுகவுரை வழங்கி, புலிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கல்லூரி இயற்கை மன்ற மாணவி வெ. அம்ருத சஞ்சனா, புலிகள் பாதுகாப்பு குறித்த கருத்துரையை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், வண்ணத்துப்பூச்சி வகைப்பாடு குறித்த கையேடு வழங்கப்பட்டது.
ரோட்டரி கிளப் சார்பாக முகவர் முருகன் மற்றும் டாக்டர் சங்கிலி விக்ரம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கெளரவப் படுத்தினர்.

விழாவில், ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ரவி மீனா கலந்துகொண்டு முதன்மை உரையாற்றினார். அவரது உரையில், புலிகளின் பாதுகாப்பு பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கையை பாதுகாப்பதன் மூலம் புலி இனங்களை பாதுகாக்கலாம் என்று எடுத்துரைத்தார். சிவகாசி கோட்டாட்சியர் முகமது இர்பான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, காடுகளில் புலிகளின் பங்கும் அதன் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ரோட்டரி கிளப் மண்டலம் 27 உதவி ஆளுநர் சந்தோஷ் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை உதவி பேராசிரியர் ராம்ஜி ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்வில் 160 கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed