ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது நத்தம் பட்டி அந்த நத்தம் பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உதயசூரியன் சப் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் போலீசார் நத்தம்பட்டி டோல்கேட் அருகே ரோந்து பணியில் இருந்த போது லாரி ஒன்று வந்தது லாரியை சோதனை செய்ய போது அதில் 2 கிலோ 25 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மாரிமுத்து (வயது 31) என்பவரை நத்தம் பட்டி போலீசார் கைது செய்தனர் லாரியையும் புகையிலை பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூபாய் 1200 ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ புகையிலை பொருள்களுக்காக லாரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தால் நத்தம் பட்டி டோல்கேட் பகுதியில் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *