கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மத்தகிரி பேருந்து நிலையம் அருகே, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், 1952-ஆம் ஆண்டு கே.ஆர்.பி அணை கட்டும் பணிக்காக வெளியேற்றப்பட்ட மக்களும், 100 ஆண்டுகளுக்கும் மேலாக வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்களும் இன்றும் பட்டா இன்றி தவிக்கின்றனர். சாலை, குடிநீர், பள்ளி, ரேஷன் என அனைத்து அடிப்படை வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டும், பட்டா இல்லாததால் விவசாயிகளால் பயிர்க்கடனோ, அரசு சலுகைகளோ பெற முடிவதில்லை. ஆனால் அதிநித்திரைஅனாடீனம்’, ‘விட்டோடிகள் நிலம்’ என வனத்துறை உரிமை கொண்டாடுவதை கைவிட்டு, உடனடியாக தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழக அரசு நீக்க வேண்டும். கேரள மாநிலத்தை போல, பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல விவசாயிகளுக்கு உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும், வன நிலம் வழியாக பட்டா நிலங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்ல வனத்துறை விதிக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் இராமகவுண்டர் விவசாய நிலத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல விவசாயிகளுக்கு கேரளா அரசு ஊக்கத் தொகையுடன் அனுமதி அளித்து உள்ளது, அது போல தமிழகத்திலும் உரிய அனுமதி அளித்திட வேண்டும்,
கிருஷ்ணகிரி கே, ஆர்.பி. அணை கட்ட நிலம் கொடுத்தவர்கள் மற்றும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வன நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்யும் இவர்களுக்கு பட்டா இதுவரை பட்டா வழங்கப்படவில்லை, இது போல குறித்து பல ஆண்டுகளாக, கடந்த ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய எங்களுக்கு, தற்போதைய முதலமைச்சர் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஒரு மாதத்திற்குள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வனத்துறை அலுவலகத்திலேயே இரவு பகலாக தங்கி தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என திட்டவட்டமாக எச்சரித்தார்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெயராவியிடம் மாநில தலைவர் இராம கவுண்டர் கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் கண்ணையா, மாநிலத் துணைச் செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட தலைவர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட துணைச் செயலாளர் கண்ணப்பன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்ரமணியரெட்டி, மேற்கு மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கூட்டத்தின் போது தமிழக விவசாய சங்கத்தைச் சார்ந்த காவேரியப்பா, சுந்தரம், சம்பத்குமார், மஞ்சுநாத் ரெட்டி, வெங்கடேஷ், லூர்தசாமி, மணிவண்ணன், சரவணகுமார், பாலாஜி, நாகராஜ், ராஜ்குமார், முருகன், பாஸ்கர், தேவராஜன், ராமமூர்த்தி, சண்முகம், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, ராஜீவ் காந்தி, கிருஷ்ணசாமி, மகேஸ்வரி, நந்தீஸ்வரன், மஞ்சுநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
