ஆயிரம் வருடம் பழமையான சோழர்கால கோவில் ஒய்சாள அரசன் வீர இராமநாதனின் தலைநகரம், என பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தடாகங்கள் நிறைந்த இடம், கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னகொத்தூரில் உள்ள “குந்தீஸ்வரர் கோவிலின்” கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமாக முதல் ஆலோசனை கூட்டம் கோயிலின் வளாகத்தில் இன்று (26.07.26) நடைபெற்றது.

இந்த நிகழ்வில், அறம் வரலாற்று ஆய்வு மைய நண்பர்கள், ஓசூர் மக்கள் சங்கம் நண்பர்கள் தொடர்ந்து உதவி செய்து வரும் கொடையாளர்கள், திருவாசகம் முற்றோதும் குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அடுத்த வருடம் (2027) தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தொடங்குவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

நிகழ்வின் முடிவில், அடுத்த ஆலோசனை கூட்டம் (30.08.26) தேதியில் இதே கோயில் வளாகத்தில் நடைபெறும் என்று குந்தீஸ்வரர் ஆலயக்கமிட்டி சார்பில் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed