திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், இணைந்து சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், உடலுக்கு சத்துமாவு – சுற்றுச்சூழலுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் வரவேற்றார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் ஜே. சில்வியா நெப்போலியன் தலைமை வகித்தார்.மாவட்ட ஆளுநர் லயன் விஜயலட்சுமி சண்முகவேல், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில், உடலுக்கு சத்துமாவு – சுற்றுச்சூழலுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.

உறுப்பினர் வளர்ச்சி குழுத் தலைவர் லயன் ரவி,விரிவாக்க சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் சசிதரன், மாவட்ட பொருளாளர் எழிலரசி ரவி, மாவட்ட நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிதி அலுவலர் சௌந்தரபாண்டியன், மாவட்ட நிர்வாக அதிகாரி நடராஜன், சங்க வழிநடத்துதல் செயலாளர் சரவணபெருமாள், இலக்கு உந்துனர் சரவணகுமார், ஆளுநர் செயலர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட நிதி ஆலோசகர் ஜோசப், மண்டலத் தலைவர் முகமது சபி, லீடு டோனார் வையாபுரி, வட்டாரத் தலைவர் சரவணன், மாவட்ட அவை இணைச் செயலாளர் பொன்னுவேல், மாவட்ட இணைப் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் தலைவர் ரகுபதி ராஜன், செயலாளர் சிவராமன், பொருளாளர் சூரிய நாராயணன், திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் சங்கத்தின் தலைவர் ஹேமலதா, செயலர் விஜயகுமார், பொருளாளர் முகமது ஹயாஸ், துணைத் தலைவர் முனைவர் சங்கர், கணேசன், இயற்கை மருத்துவர் கௌதமன், ஹரி பிரசாத், மகேஸ்வரி, கிருஷ்ணகாந்த், உஷா கேசவன், சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சத்துமாவின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. சிறுதானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களால் தயாரிக்கப்படும் சத்துமாவு, உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு துணைபுரியும் உணவாகும் என எடுத்துரைக்கப்பட்டது. அதேநேரத்தில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்களுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப்பைகள் வழங்கப்பட்டன.

துணிப்பை பயன்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் குறைவதுடன், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படுகின்றன. என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், பசுமையான வாழ்க்கை முறையையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் சங்கத்தினரால்
வலியுறுத்தப்பட்டது.

செய்திகள் ; விஜயகுமார் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed