விருதுநகர் மாவட்டம்
கூமாபட்டி சேர்ந்த மோகன் என்பவர் வத்திராயிருப்பு – கூமாபட்டி சாலையில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இவர் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் வட்டிக்கு கடன் பெற்றிருந்தார். அக்கடனுக்கான வட்டியை கணக்கீடு செய்வதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
வினோத் அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை பெட்ரோல் பங்க்கிற்கு வந்து வினோத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அங்கு பணிபுரியும் சேது நாராயணபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மருதபாண்டி மனைவி சுதந்திரா(32) என்பவரை அவதூறாக பேசி, தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீசியதால் பங்க்கில் லேசாக தீ பற்றியது.
அந்த பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து, சுதந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
