கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அக. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.சி. சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜா குமாரவேல், நாராயண மூர்த்தி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட துணை தலைவர் ரகமத்துல்லா, நகர மன்ற உறுப்பினர் விநாயகம், டாக்டர் தகி, எஸ். சி, துறை மாவட்ட அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி ரமேஷ் அர்னால்ட் மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜேந்திரவர்மா முன்னாள் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம், வட்டார தலைவர்கள் அயோத்தி, சித்திக், நஞ்சுண்டன், விளையாட்டு பிடித்த மாரியப்பன், சக்கரவர்த்தி, நகர தலைவர்கள் விஜயகுமார், ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அகா கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயண மூர்த்தி ஆகியோர் மெழுகுவர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை, காந்தி சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணியானது, தர்மராஜா கோவில், பெங்களூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை வழியாக வந்து கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் திருஉருவச்சிலை முன்பாக நிறைவடைந்ததை தொடர்ந்து நீட் தேர்வினால் உயிர் நீத்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுகளில் வினாத்தாள் கசிவினால் பாதிக்க பட்ட இளைஞர்களுக்கு நியாயம் வேண்டியும், மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டும், தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.
மேலும் மத்திய அரசினை கண்டித்து நடத்தப்பட்ட இந்த பேரணியின் போது சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ஜாவித் கான்,கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, பர்கூர் நகர தலைவர் யுவராஜ் , சம்பத், ஜெயவேல், முன்னாள் நகர தலைவர் வின்சென்ட், சின்னதம்பி, அண்ணாதுரை, முத்து, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர், அப்சல், குட்டி (எ ) விஜயராஜ், பிரஸ் சரவணன், ஊடகப்பிரிவு கமலக்கண்ணன், நகர துணை தலைவர் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு கவியரசன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் பிரிவு சபிக், சக்திவேல், அஹமத், ரபீக் ஜமால், முனவர், ஏழுமலை, சிம்மராயன், சதாசிவம், அன்வர், முஸ்டாக், சுந்தரேசன், வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் கண்ணன், மோகன், பாண்டுரங்கன், அப்பு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

கூட்டம் முடிவில் முன்னாள் மாவட்ட தலைவர் ஆஜித் பாஷா நன்றி கூறினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
