வேலூர் மாவட்டம் குடியாத்தம்
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தெய்வத்திரு. கு.மா.கோவிந்தராசனாரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடியாத்தம் திருவள்ளுவர் மேனிலைப்பள்ளியில் திருவுருவப் படத்திற்கும் மற்றும் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும், நடைபெற்று முடிந்த அரசுப் பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் 498/500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்; பெற்ற மாணவி செல்வி. எஸ்.காவ்யாவிற்கு காசோலை ரூ.25,000/- மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் 596/600 முதலிடம் பெற்ற மாணவி செல்வி. எஸ். ஜெயசுதாவிற்கு காசோலை ரூ.10,000/- கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பாக வழங்கப்பட்டது.

மேலும், மாணவிகளின் பெற்றோர்களுக்கு மரியாதை செய்து, அம்மாணவிகளுக்கு பயிற்றுவித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து வாழ்த்தினர்.

இவ்விழாவிற்கு, கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பெருமக்கள், திருவள்ளுவர் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *