நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சிஜேபி சார்பில், தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில், பங்கேற்று வந்த, சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாக சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர்.


அதில், ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களும், தோழர் ரவிக்குமார் அவர்களும் நேரில் சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மாணவருடைய நியாயமான போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என உறுதியளித்தார்.

மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, மேலும் அவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்து உங்களுடைய பிரச்சனைகளை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பி உரையாற்றுவேன் என்று உறுதி அளித்து அளித்ததற்கு, அந்தப் போராட்ட குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் ; லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777
