தேசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்கப் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் பெற்று தமிழக வீராங்கனை திலகவதி சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் ‘பவர் லிஃப்டிங் இந்தியா’, தேசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகளை நடத்தியது. 6 நாட்கள் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மாஸ்டர்ஸ் -1 (76 கிலோ எடைப் பிரிவு) போட்டியில் கிளாசிக் மற்றும் எக்யூப்டுஆகிய இரு பிரிவுகளில் கலந்து கொண்ட திலகவதி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு பதக்கங்களை வென்றார்.
‘கிளாசிக்’ பிரிவில் 422.5 கிலோ ‘டெட் லிஃப்ட்’ பிரிவில் 180 கிலோ எடை தூக்கி 2 தங்கப் பதக்கங்கள் வென்றார்.
மேலும், 152.5 கிலோ ‘ஸ்குவாட்’ பிரிவில் வெள்ளிப் பதக்கம்,
90 கிலோ ‘பெஞ்ச் பிரஸ்’ பிரிவில் வெள்ளிப் பதக்கங்களும் வென்றார்.

தவிர, ‘எக்யூப்டு’ பிரிவில், சிறப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் போட்டியிட்டு, 165 கிலோ ஸ்குவாட், 87.5 கிலோ பெஞ்ச் பிரஸ், 176 கிலோ டெட்லிஃப்ட் போட்டிகளில் 3 வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். அதோடு, இந்தப் போட்டியில் 176 கிலோ ‘டெட் லிஃப்டில்’ தேசிய சாதனையும் புரிந்தார்.
திருமணமாகி மகன் பிறந்த பிறகு, 36 வயதில் பவர் லிஃப்டிங் விளையாட்டில் அடியெடுத்து வைத்த திலகவதி, குறுகிய காலத்தில் தேசிய அளவில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறார். இதற்கு முன்பு நடைபெற்ற தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரு முறை வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
