அகில இந்திய அளவில் 7 மாணவர்களும் தமிழக அளவில் 15 மாணவர்களும் தரவரிசையில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வேலம்மாள் போதிப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், மாணவர்களுக்கு வாழ்த்து கூறி உற்சாகம் அளித்த முதல்வரும் இயக்குனடுமான பாலமுருகன் கூறுகையில் ; வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பாராட்டு விழா நடைபெறுகிறது. அப்துல் கலாம் கண்ட கனவு போல் நீங்களும் கனவு கண்டு வெற்றி பெறுங்கள் சாதனை புரியுங்கள் பள்ளி உங்களுக்கு துணை புரியும் நாங்கள் உங்களுக்கு வழி காட்டுவோம் எனக் கூறினார்.

நீட் தேர்வில் அகில இந்திய அளவிலும் தமிழக அளவில் தர வரிசையில் இடம் பெற்ற வேலம்மாள் போதி மாணவர்களுக்குபாராட்டு விழா நடைபெற்றது .
நீட் தேர்வு எனப்படும் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் அகில இந்திய அளவில் தரவரிசையில் 12 வது இடத்திலும் தமிழ்நாடு மாநில அளவில் 1-வது இடத்தையும் பெற்ற வேலம்மாள் போதி பள்ளி மாணவர் வெங்கடபதி வேலாயுதம் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்,மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர் சுடர் நீட் தேர்வில் 696 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 45 வது இடமும் தமிழக அளவில் மூன்றாவது இடமும் பெற்று தேர்வாகியுள்ளார், மேலும் வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர் ஜெய கிருஷ்ணா 695 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 75வது இடமும் தமிழக அளவில் 6 வது இடமும் ,தேனி போதி பள்ளி மாணவி சவிதா அகில இந்திய தரவரிசையில் 82 வது இடத்திலும் தமிழ்நாடு மாநில தரவரிசையில் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு புதுச்சேரி கர்நாடகா 3 மாநிலங்களில் இருந்து வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2026 தேர்வில் 124 பேர் 600 மதிப்பெண்கள் மேல் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை அடைந்துள்ளனர்.

தனது வெற்றி குறித்து, மாணவர் சுதீர் கூறும் போது ;
இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என பள்ளியில் முதல்வர்கள் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள் மூலம் சிறந்த பயிற்சி அளித்ததால் நான் வெற்றி பெற்றுள்ளேன் அதற்கு நன்றி முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்கடந்த முறை ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வில் நன்றாக எழுதி இருந்தேன் ஆனால் திடீர் என தேர்வு ரத்து செய்யப்பட்டது வருத்தமளித்தது ஆனாலும் தொடர்ந்து இரண்டாவது முறை நீட் தேர்வில் எழுதி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது தேர்வு என்பது கடினம் அல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். நீட் தேர்வு என்பது தேவைதான் ரத்து செய்ய வேண்டுமா என்பதை பற்றி எனக்கு தெரியாது என கூறினார்.

மாணவி சம்விதா கூறும்போது ;
முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்றுள்ளேன். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனது பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். தேர்வு மிகவும் கடினமாக இருந்தது ஆனாலும் தொடர்ந்து பள்ளியில் படித்தவுடன் பயிற்சியில் இருந்ததால் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. எனக்கு உதவிய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வேலம்மாள் குமுமத் தலைவர் அய்யா முத்துராமலிங்கம் ஆகியோருக்கு நன்றி எனக் கூறினார்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
