தன்மானம், சுயமரியாதை, கௌரவம் இவை அனைத்தையும் விட TRP-தான் முக்கியமா?

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அவர் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்க சென்றிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அவர்கள் செய்தி சேகரிப்பதற்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுக்காமல், செய்தியாளர்கள் அனைவரும் சாலையின் வாரங்களில் இருக்கக்கூடிய நடைமேடையில் நிற்கவைக்கப்பட்டு இருந்தனர். செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நிற்பதற்கு கூட இடங்களை முறையான ஏற்பாடு செய்யாமல் அவர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டுள்ளனர்.

தாங்கள் பணியாற்றும், ஊடக நிறுவனங்கள் உத்தரவை ஏற்று, பெரம்பூரில் செய்தியாளர்கள் மிகவும் மன வேதனையுடன், தரம் தாழ்ந்து போய் பணியாற்ற கூடிய சூழ்நிலை நிலவியதை கண்டித்து.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது ;

அ.தி.மு.க. அரசு ஓரளவுக்கு பத்திரிகையாளர்களை மதிக்கும் பண்பைக் கொண்ட ஆட்சியாக இருந்தது. தி.மு.க. அரசு 70% முதல் 80% வரை ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையிலும், பெரிய அளவில் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை. ஆனால், ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தவர்களே.

பத்திரிகையாளர்களை கையாள்வதில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகளைவிட த.வெ.க. அரசு மிகவும் மோசமான முறையில் செயல்படுகிறது. எப்படியாவது செய்தியை சேகரித்து அனுப்ப வேண்டும் என்று ஊடக நிறுவனங்கள் செய்தியாளர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கின்றன.

ஆனால், த.வெ.க. அரசு செய்தியாளர்களை தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறது.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் நமது செய்தியாளர்கள் தான்.

இன்று வரை ஒரு முறை கூட முதலமைச்சர் பத்திரிகையாளர்களை நேரில் சந்திக்கவில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்கக்கூட முடியாத சூழ்நிலையில், இதுபோன்ற அவலங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *