தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில், ஆட்சி அமைத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 58 விழுக்காட்டில் இருந்து 60% விழுக்காடு உயர்த்தி வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச..விஜய் ஜோசப் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும்,
மேலும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற கோரிக்கையான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் , ஐந்தாண்டிற்கு மேல் சிறப்பு கால முறை ஊதியம் , ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணிந்திரம் செய்தல் , காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அறிப்புகளும் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு 12,000 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் முரண்பாட்டை சரி செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகள் : லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777
