தேர்தல் திருவிழா...

புத்தம் புது வண்ணங்களால்
சின்னங்களைச் சுமந்த
தெருச்சுவர்கள்
வீதியெங்கும் ஒலிபெருக்கிகள்..
புழுதி பறக்க வாகனங்கள்
அதை விரட்டியோடும் சிறுவர்கள்
அடுப்படியிருந்த அக்காவும் தொலைக்காட்சி தொடரில் இருந்த அம்மாவும்
அக்கம் பக்கத்துப்
பாட்டிகள் எல்லாம்
தெரு வீதிக்குக் கூடிடும் கோலாகலம் பாருங்கள்..
களைத்துப் போகா தொண்டர்களுடன்
பவனி வரும் வேட்பாளர்கள்
மதங்கள் மறந்து
இனங்கள் மறைந்து
ஊர் கூடிக்
கொண்டாடும் விழா.,
வரவிருக்கின்றது
ஏப்ரல் இருபத்து மூன்று, மலரவிருப்பதோ
வாக்களிக்கும் பொழுது
இது மக்களுக்கானது .
இது மாற்றத்திற்கானது .
இங்கே
கொடிபிடித்திடும் சிலர்
துண்டு சீட்டுடன் பலர்
எத்தனை எத்தனையோ வண்ணங்கள்
அனைவருள்ளத்திலும்
பல எண்ணங்கள்
மலிவு விலையில்
கொடுத்திட இது ஆடையல்ல ஆவணம்..
பணம் பொருள் தவிர்த்து வாக்களித்தால்
தலை நிமிர்ந்து சென்றிடலாம்
மதிப்பு மிக்க வாக்கிற்கு
மதிப்பளித்து வாக்குச்சாவடி சென்றிடலாம்..
நூறு விழுக்காடு வாக்களிக்க
விழிப்பாய் நாமும் விரைந்திடலாம்
வரவிருக்கின்ற
ஏப்ரல் இருபத்து மூன்று
அடடா அழகுத் திருவிழா
தேர்தல் எனும் பெருவிழா…

சு. ஜெயபாரதி.
ஆறுமுகனேரி .
தூத்துக்குடி மாவட்டம்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed