அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டும் அவர் முதல்வராக வேண்டியும் அண்ணாமலை நற்பணி மன்றத்தினர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

தமிழக பாஜகவின் மாநில தலைவரா. 👌🏻க செயல்பட்டவர் அண்ணாமலை பின்னர் அவர் மாநில பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட எந்த பதவியும் வகிக்காமல் பாஜகவில் தொடர்ந்தார். அண்மையில் அவர் டெல்லி சென்று போது பாஜக மேல் இடத்தில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து பாஜகவில் இருந்து விலகி விட்டதாகவும் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் தமிழக முழுவதும் அவரது பிறந்தநாளை கொண்டாடி பல்வேறு விதமான போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் முருகனின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அண்ணாமலை நற்பணி மன்றத்தினர் சார்பில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலை நீண்ட ஆயுளுடனும் அவர் முதல்வராக வேண்டியும் வழிபாடு நடத்தியதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.

அண்ணாமலை நற்பணி மன்ற மாநில தலைவர் வேல் கண்ணன் பேசும்போது: அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் எங்கள் மன்றம் அவருடன் பயணிக்கும். ரசிகர் மன்றம் என்பது ரஜினி கமலுடன் ஒப்பிட முடியாது, ஒரு தலைவர் இப்படித்தான் இருக்கணும் என்ற எல்லாருடைய கற்பனையும் அவர் செயலில் காட்டியவர், விஜயை விட இவருக்கு அதிக வரவேற்பு இருக்கும் கட்சி தொடங்கினால் கண்டிப்பாக முதல்வராகி விடுவார் அவருடைய அரசியல் இந்த காலகட்டத்திற்கு தேவையானது. எல்லாரும் சொல்லுவார்கள் இவர் செய்வார் அதனால் அவர் எங்களுக்கு பிடித்த தலைவர் என்றார்.

இதுகுறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் கே சி திருமாறன் பேசும்போது: இளைஞர்களுக்கு எழுச்சி நாயகனாக தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் பதிந்த தலைவனாக அண்ணாமலை திகழ்கிறார். அவர் நீடூடி வாழ வேண்டும் அவரது அரசியல் முன்னேற்றம் அடைய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் எதிர்பார்க்கக் கூடிய தலைவர் அண்ணாமலை நீடூடி வாழ வேண்டும் அதற்காக தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினோம் என்றார்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
