
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலாடு அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாவது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் நடைபெற்றது. பிற்பகல் யாக குண்டம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக கலசங்களுக்கும், வேதபுரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் உடன் யாக பூஜைகள் நடைபெற்றது. யாக சாலையில் ஹோமங்கள், வேள்விகளுடன் ருத்ரா யாகம் நடைபெற்றது.


ஸ்ரீலஸ்ரீ சாக்த மஹாகுரு,வாழும் சித்தர், டாக்டர் ஸ்ரீம் மகேஷ்குமார் சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி நடைபெற்று பக்தர்கள் யாக குண்டத்தில் பொறிஅவல் போட்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் நந்தகுமார், தியாகராஜன், சுகுமார், மனோகர், சரவணன், சுமன், செந்தில், மணிகண்டன், பாபு, ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர். பொன்னேரி பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
