வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றனர். ஆனாலும் இதுவரை திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு மு.ராசாத்தி என்பவரை நாம் தமிழர் கட்சி நிறுத்தியுள்ளது.

இளங்கலை பொறியியல் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு படித்துள்ள ராஜாத்தி பொன்னேரி தொகுதியின் தேர்தல் பிரச்சாரத்தை மேலூர் அருள்மிகு திருவுடையம்மன் கோவிலில் பூஜை செய்து தொடங்கியுள்ளார்.

விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பொருட்டு மேளதாளத்துடன் பறையாட்டம்,மயிலாட்டம்,மாடாட்டம், சிலம்பாட்டத்துடன் கலை கட்டிய பிரச்சாரத்தில் விவசாயி ஒருவர் ஏர் கலப்பை வைத்துள்ள விவசாயி பொம்மை மற்றும் கரகாட்ட பொம்மையுடன் நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் ராஜாத்தி பொன்னேரி தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தான் வெற்றி பெற்ற பிறகு தீர்ப்பேன் என்றும் பொன்னேரியில் கொசஸ்த்தலை ஆறு மற்றும் ஆரணி ஆற்றில் கொள்ளை போகும் கனிம வளத்தை காப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி கூறினார்.

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மேலூர், பட்டமந்திரி, வல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed