ஏப்ரல் 01-ந் தேதி மின்சார தீப ரதம், 03 -ந் தேதி பால்குடத் திருவிழா, பங்குனி மாதம் பிறந்தாலே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பங்குனித் திருவிழா என வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது நடைமுறை பழக்கமாக உள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரின் மத்தியில் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் ஆலயம் அமைந்து மக்களின் காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார். கோவிலில் பங்குனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 12 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதனையொட்டி, ஸ்ரீ முத்தால பரமேஸ்வரியம்மன் கோவிலில் 23.03.2026. திங்கள் . இரவு காப்பு கட்டுதலுடனும், 24.03.2026. செவ்வாய். காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியதுடன், முதல் நாள் திருவிழா ஆரம்பமானது. 25.03.2026. புதன். 2-ம் நாள் திருவிழாவாக பாரதிநகர் மண்டகப்படியிலும், 4-ம் திருவிழாவாக 27.03.2026. வெள்ளி.. வன்னியகுல க்ஷத்திரிய மகாசபை சார்பில் வண்டி மாகாளி வேஷத்துடன் திருவிழா கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

8-ம் நாள் திருவிழாவாக 31.03.2026. செவ்வாய்.ஏ.பி.முத்தரசன் குடும்பத்தார்கள், த.பெ.மு.அ. பாலுச்சாமி செட்டியார் பரம்பரை பூர்வக டிரஸ்டி சார்பிலும், திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, 01.04.2026. புதன். இரவு ஸ்ரீ முத்தாலம்மன் மின்சார தீப ரதத்தில் வீற்றிருந்து கோவிலின் நாற்புற வீதிகளிலும் வலம் வந்து கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் பாலிப்பார்.

அன்றைய தினம் விடியற்காலை முதல் மாலை வரை ஆயிர வைசிய சமூக நலச்சங்கம், ஆயிர வைசிய இளைஞர் சங்கம், உள்பட பல்வேறு சங்கங்கள் – அமைப்புகள் சார்பில் ஆயிரக்கணக்கானவர்கள் அக்னிசட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்துவர்.

02.04.2026. வியாழன். விடியற்காலை பல வர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் முத்தாலம்மன் கள்ளழகர் வேடம் பூண்டு பூப்பல்லக்கில வீற்றிருந்து வைகையாற்றில் இறங்குவார்.

திருவிழாவின் முத்தாய்ப்பாக, 03.04.2026. வெள்ளி விடியற்காலை முதல் நண்பகல் வரை ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச்சங்கம், ஆயிரவைசிய மறுமலர்ச்சி பேரவை, ஆயிரவைசிய செட்டியார் பேரவை, மதுரையார் மண்டகப்படி உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

அதனைத் தொடர்ந்து, முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாரதனையும் நடைபெறும். இரவு பலவர்ண மலர்களால் சூழப்பட்ட பூப்பல்லக்கில் முத்தாலம்மன் சயன கோலத்தில் வீற்றிருந்து நகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காட்சி தருவார். திருவிழாவை தொடர்ந்து, தினமும் காலை, இரவு முத்தாலம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் வீற்றிருந்து நகரில் வலம் வந்து மக்களுக்கு அருள் பாலிப்பார்.

மேலும், திருவிழாவயொட்டி , மாலை நேரத்தில் சக்தி மகளிர் மன்றத்தின் சார்பில் பஜனை, கோலாட்டம், ஜனனி மகளிர் மன்றத்தின் பஜனை, கோலாட்டம், இராமகிருஷ்ணர் மாதர் பஜனைக் குழுவினரது பஜனை,ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம், பட்டிமன்றம், பள்🤝ளி மாணவர். மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

12-ம் நாள் நிகழ்வாக 04.04.2026. சனிக்கிழமை. இரவு உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.
திருவிழாவைக்காண பரமக்குடி, எமனேஸ்வரம், w, மதுரை, தேவகோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து திருவிழாவை கண்டு மகிழ்ந்தும், முத்தாலம்மனின் அருளை பெற்றுச் செல்வர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை தலைவர் எஸ். பாலுச்சாமி , இணைத் தலைவர் ராசி என்.போஸ், துணைத் தலைவர்கள், செயலாளர் எஸ்.கே.பி. இலெனின்குமார், பொருளாளர் ஏ.ஆர். சுப்பிரமணியன் உள்பட கெளரவச் செயலாளர்கள், ஆயிரவைசிய சபை நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சபை நியமன உறுப்பினர்கள், அருள்மிகு ஸ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வராள் – ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் டிரஸ்டிகள் அம்பலம் மு.வா.பா. ஜெயராமன், த.அ.செ.ஸ்ரீ வா. ரவீந்திரன், மேனேஜிங் டிரஸ்டி ந.அ.சி.ந.சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி, கோவில் கோபுரங்கள், கோவில் வளாகம் உள்பட நகர் முழுவதும் டியூப்லைட் , மைக்செட், சீரியல் பல்புகளால் ஜொலித்து நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது .

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed