மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கல்வி பணியில் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா நடைபெற்று இலக்கியப் போட்டி பேச்சுப்போட்டி மாறுவேட போட்டி விளையாட்டுப் போட்டி மற்றும் சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற தினங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம்,

அதேபோல், இந்த ஆண்டுக்கான பள்ளியின்ஆண்டு விழா வருகின்ற சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள ரவி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பள்ளியின் தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் நேரில் சென்று வழங்கினார்.
மேலும், வருகின்ற சனிக்கிழமை நடைபெறும் ஆண்டு விழாவுக்கான மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகளுக்கான பயிற்சிகள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பெற்றோர்கள் பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
