நான், பாலகிருஷ்ணன்,
அனுப்பம்பட்டு அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என்னை நன்றாக தெரியும். ஆனால், தற்போது அரசியலில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு, நான் யார் என்று தெரிந்தும், தெரியாதது போல் நடித்து கொண்டிருக்கிறீர்கள் அதற்கு நன்றி,

நான், 1984 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து அரசியல் ஈடுபாடு கொண்டவன், அனுப்பம்பட்டு திமுக கிளை செயலாளர்களாக ஆச்சாரி பாலு அண்ணன், மணி அண்ணன் ஆகியோர் மற்றும் திராவிட கொள்கை பற்றாளர் தயாளன் மாமா, G.S. சுப்பிரமணியம் ஆசிரியர் ஆகியோருடைய வழிகாட்டுதலில் வளர்ந்தவன், 1989 ம் ஆண்டில், மணி அண்ணனுடைய பரிந்துரையில், முன்னாள் அமைச்சர் சுந்தரம் அண்ணன் அவர்கள் என்னை அனுப்பம்பட்டு மக்கள் நலப்பணியாளராக பணியாற்ற செய்தார்.



அந்த பணியை தொடர்ந்து செய்ய முடியாத அளவிற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அந்த பணியை பறித்து விட்ட சூழ்நிலையால், நான் பத்திரிக்கையாளராக பணி செய்ய துவங்கினேன். நான் பத்திரிக்கையாளராக பணியாற்றினாலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பயணித்த, என் அண்ணன் பாண்டியராஜன் அவர்களுடைய ஆசைப்படி, 2009 ம் ஆண்டில் இருந்து மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பை துவக்கி, அதன் மூலம் அனுப்பம்பட்டுக்கு மக்கள் நலப் பணியாளராக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று வரை அனுப்பம்பட்டிற்கு, ஊதியம் வாங்காத ஊழியனாகவும், பங்கு கேட்காத பங்காளியாகவும் எந்தவித பலனையும் எதிர்பாராமல் மக்கள் நலப் பணியாளராக என் பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன்.


இன்றைய காலகட்டத்தில் அனுப்பம்பட்டிற்கு மட்டுமில்லாமல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் என்னுடைய மக்கள் நலப்பணி இயக்கத்தின் மூலமாக, மக்கள் நலப் பணியை நான் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
இன்று அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் சிலர், இவன் ஏன்? இங்கே வந்து எதையாவது செய்து கொண்டே இருக்கிறானே, இவனை என்ன செய்வது என்ற கோவத்திலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு கடவுள் மறு பிறவியை கொடுத்திருக்கிறார், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வாழ்நாளையும், கடவுள் எனக்கு கூடுதலாக கொடுத்தது, அதை என்னுடைய வாழ்நாளில் அடையாளமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். அனுப்பம்பட்டு அடுத்த தலைமுறையினருக்கும் நான் செய்த பணிகள் பேர் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.


இதை நான் செய்வதற்கு மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நான் அனுப்பம்பட்டில் தற்போது செய்து கொண்டிருக்கும் இந்த மக்கள் நல பணிகளை எல்லாம், ஏதோ, நான் நமது ஊரில் தேர்தலில் நிற்பதற்காக செய்து கொண்டிருக்கிறேன் என்று சிலர் நினைக்கின்றார்கள். கண்டிப்பாக, நான் எனக்காக அனுப்பம்பட்டில் ஓட்டு கேட்டு யாரிடமும் நிற்கமாட்டேன். சிலர், நான் இப்போது செய்து கொண்டிருக்கிற பணிகளில் எல்லாம் குற்றம் கண்டுபிடிப்பதும், குறை சொல்வதும், போதும் நிறுத்தி கொள்ளுங்கள், பத்மநாப நாயுடு தலைவராக இருந்த காலத்தில் இருந்து, என் அண்ணன் பாண்டியராஜன் அவர்கள் பின்னால் நின்று மக்கள் நலப்பணி செய்ய துவங்கினேன். அதை இன்று வரை செய்து கொண்டிருக்கிறேன். உங்களால் முடிந்தால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், இல்லை என்றால் தயவு ஒதுங்கி நின்று கொள்ளுங்கள்,


அனுப்பம்பட்டில் பலர் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். கண்டிப்பாக, மக்கள் நலப்பணி செய்வதற்கு மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதேபோல் மக்கள் பிரதிநிதியாக இருந்தால், அவர்கள் கடமை ரோடு போடுவதும், தெருவிளக்கு சரி செய்வதும், குடிநீர் கொடுப்பதும் மட்டும் கிடையாது, அந்த வேலையை நமது ஊரில் குடிநீர் ஆபரேட்டராக இருக்கும் சகோதர் ரவி அருமையாக செய்து விடுவார், அவருக்கு ஊராட்சி நிர்வாகத்தில் அந்த அளவிற்கு அனுபவம் உள்ளது. ஆனால், பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு தான், அவர் அளவிற்கு அனுபவம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தேர்தல் அரசியலுக்காக மட்டும் அங்காளம்மனையும், முத்தாலம்மனையும் பயன்படுத்த நினைக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு நான் செய்யும் பணிகளின் நோக்கம் புரியாது. நான் மற்றவர்கள் என்னை பெருமையாக பேச வேண்டும் என்பதற்காக நான் பிறந்த நமது ஊருக்காக செய்த எந்த பணிகளையும் இதுவரை வெளியில் சொல்லி கொள்வதும் இல்லை, காட்டி கொள்வதும் இல்லை, இருந்தாலும் பலருக்கு நான் ஒரு சில விஷயங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


என்னுடைய சிறு வயதிலிருந்து எனக்கு ஒரு பழக்கம் உண்டு, யாரும் செய்ய தயங்கக்கூடிய, செய்ய முடியாத வேலையை, நாம் கையில் எடுத்து செய்ய வேண்டும் என்று நினைப்பது என் பழக்கம், உதாரணத்திற்கு, சொல்ல வேண்டுமென்றால், அன்பழகன் அண்ணன் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது அவருடைய தீவிர ஆதரவாளர்களாக இருந்த ஆண்டியார்பாளையம் மதுரை அண்ணன், ஜெயா அண்ணன், குப்பன் அண்ணன், ஆகியோர் ஆண்டியார் பாளையத்தில் உள்ள சிவன் கோயிலுக்காக குடிநீர் வசதி கேட்டு முறையிட்டபோது, அவர் அதை செய்ய மறுத்துவிட்டார். இவர்கள், முன் வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணம் மாதாமாதம் செலுத்துகிறோம் என்று சொல்லியும், அந்த கோயிலுக்கு குடிநீர் இணைப்பு தலைவர் கொடுக்க மறுத்ததால், அதை ஜெயா அண்ணன் என்னிடம் கூறி வருத்தப்பட்டார். நான், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டு, அதன் மூலம் அந்த கோயிலுக்கு முன்வைப்புத் தொகை எல்லாம் ஏதும் கட்ட வேண்டாம் என்றும், ஊராட்சி நிர்வாகத்தின் செலவிலேயே அந்த குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு கடிதத்தை பெற்று கொடுத்தேன்.

அதேபோல், 2012 ம் ஆண்டில் உதண்டி கண்டிகை பகுதியில் தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு எடுத்தேன். அதில் தான், தற்போது புதிய குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அன்று என்னையும், அன்றைய ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவராக இருந்த சுந்தரராஜனையும் செயல்பட விடாமல் மீஞ்சூர் BDO அலுவலகத்திற்கு படையெடுத்து சென்று, தனியார் கம்பெனியிடம் பணம் வாங்கி கொண்டு இவன் செயல்படுகிறான் என்று, என் மீது குற்றம் சாட்டியவர்கள் அனுப்பம்பட்டில் பலர் இருக்கிறார்கள்.
இப்படி நான் சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கிறது. ஆனால், அது எல்லாம் நான் பெருமை பேசுவதாக இருந்து விடும், இப்போது கூட இப்படி என் மனநிலையை வெளிப்படுத்துவதற்கு காரணம், அனுப்பம்பட்டில் என் மீது அபிமானம் உள்ள பலர் நீ எங்கு இருந்தாலும் அனுப்பம்பட்டுக்காக பணி செய்து கொண்டிருக்கிறாய், ஆனால் அதில் குறை இருந்தால் அதற்கு காரணம் நீதான் என்று கூப்பாடு போடுகிறார்கள். நிறை இருந்தால் அதை நீ தான் செய்து கொடுத்தாய் என்று ஒருவரும் வெளியில் கூட சொல்வதில்லை அதை தாங்களாக செய்ததாகவே பெருமை பேசிக்கொண்டு திரிகிறார்கள். என என்னை திட்டி அறிவுரை வழங்கியதாலும், மேலும், அனுப்பம்பட்டில் பக்குவப்படாத பலர் சில காழ்ப்புணர்ச்சிகளை மனதில் வைத்து கொண்டு அனுப்பம்பட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறார்கள். என்பது என்னுடைய கருத்து,

மேலும், மக்கள் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும், மக்கள் நலப்பணி செய்ய விரும்புபவர்களை ஒருங்கிணைத்து, நிர்வாகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் செய்யாததும் ஒரு காரணம், அதனால் உருவான பிரச்சனை தான், அனுப்பம்பட்டிற்கு பேருந்து யார் கொண்டு வந்தது என்ற பிரச்சனை,
அனுப்பம்பட்டிற்கு, பேருந்து வருவதற்காக பணியாற்றிய சகோதரர்களுக்கு நன்றி, இருந்தாலும் அதே பணியை செய்து முடித்து சாதித்திருக்கும் என்னை தூற்றுவது தவறு என்று ஏன் உங்களுக்கு தெரியவில்லை, நான்,
அனுப்பம்பட்டிற்கு பேருந்து வசதி வேண்டுமென்று 15 வருடத்திற்கு முன்பே, பொன்னேரி பணிமனையில் சுகுமார் என்ற மேலாளர் ஒருவர் இருந்தார். அவர் மூலமாக, நமது பகுதிக்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த 95 D என்ற பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை, விழுப்புரம் என்று சுற்றித்திரிந்தவன் நான், அந்த பேருந்து வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் சொன்னதினால், இந்த முயற்சியை கைவிட்டேன்.

இந்நிலையில், நமது திருவள்ளுவர் முன்னாள் மாவட்ட ஆட்சியளராக இருந்த ஆல்ஃபி ஜான் வர்கீஸ் அவர்கள், 2022 ம் ஆண்டு சென்னை மாநகரப் பேருந்து நிர்வாகத்தின் மேலாண் மேலாளராக இருந்தபோது, சுங்கச்சாவடியில் இருந்து மீஞ்சூர் வரை இயங்கி கொண்டிருந்த 56 E பேருந்தை அனுப்பப்பட்டு வரை நீடித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் 2024 ம் ஆண்டு எங்கள் நிர்வாகத்தின் சார்பில், சென்னை முழுவதும் புதிய பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது கண்டிப்பாக உங்கள் ஊருக்கு நான் அந்த பேருந்து வழித்தடத்தை நீடித்துக் கொடுக்கிறேன் என வாக்குறுதி அளித்தார்.
இதற்கிடையே, அவர் மாற்றலாகி மின் துறைக்கு சென்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், அதே பொறுப்பிற்கு நமது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் அவர்களை நான் சந்தித்து அதே கோரிக்கையை வலியுறுத்திய போது, அவர் கொடுத்த வாக்குறுதியை நான் நிறைவேற்றி கொடுக்கிறேன். கண்டிப்பாக பேருந்து வசதி செய்து தருகிறேன் என கூறினார். இருந்தாலும், அவருக்கு கீழ் செயல்படக்கூடிய சில அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததால், போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் அனுக திட்டமிட்டேன். அதற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைச்சருக்கு நெருக்கமானவராக இருக்க கூடிய, எங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன், தொல். திருமாவளவன் அவர்களிடம் விஷயத்தை எடுத்து கூறி அவர் தொலைபேசி வாயிலாக அமைச்சருக்கு பேசி பின்னர் பரிந்துரை கடிதத்தையும் வழங்கினார். (கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,) இதற்கிடையே எனது கோரிக்கைக்கு வழு சேர்க்கும் வகையில், அனுப்பம்பட்டு, தேவதானம், காணியம்பாக்கம், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம், நாலூர் ஆகிய ஊராட்சிகளை கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பேருந்து வழித்தடத்தின் நீட்டிப்பிற்கு வழு சேர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை நான், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன்.
அதன் பிறகு தான், நமது அனுப்பம்பட்டிற்கு பேருந்து வருவது உறுதியானது.


இதற்கிடையே, நான் பொன்னேரியில், கட்டணமில்லா டி.என்.பி.எஸ்.சி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறேன். அதில், இந்த ஆண்டிற்கான புதிய வகுப்புகள் அண்ணன் எழுச்சித் தமிழர் அவர்களை வரவழைத்து, துவக்க திட்டமிட்டு இருந்தேன். அப்போது அமைச்சர், மாவட்ட செயலாளர் மற்றும் அண்ணன் அவர்களை வரவழைத்து இந்த பேருந்து வழித்தடத்தையும் துவக்கலாம் என திட்டமிட்டு காத்திருந்தேன்.

இந்த சூழ்நிலையில், அண்ணன் எழுச்சி தமிழர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சூழ்நிலை தொடர்ந்து தள்ளி போனதால், கடந்த வாரம் அண்ணனை நேரில் சந்தித்து நமது பேருந்து விஷயமாகவும், விசிக தேர்தல் அறிக்கையில், “பனை வளத்துறையை” தமிழக அரசு நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்திருந்தேன். அவர் உடனடியாக அமைச்சரை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததின் வாயிலாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தின் வழித்தடம் நீட்டித்து கொடுக்கக்கூடிய தொலைவை அளவிடவும், அனுப்பம்பட்டில் பேருந்து நின்று செல்லக்கூடிய இடத்தை பார்வையிடவும் நாங்கள் வருகிறோம் என கூறியிருந்தார்கள். இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிக்கக்கூடிய சூழ்நிலை இருந்ததால், அவர்கள் உடனடியாக, அவசரகதியில் ஞாயிற்றுக்கிழமை அன்றே யாருக்கும் தகவல் சொல்லாமல் பேருந்தின் இயக்கத்தை துவக்கி வைத்து விட்டார்கள். இதில், நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக, நாம் மீஞ்சூரில் இருந்து 56 P பேருந்தின் வழித்தடத்தை நீட்டித்து கொடுக்க தான் கோரி இருந்தோம், ஆனால், நமது போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும், சென்னை மாநகர பேருந்து மேலான் மேலாளர் அவர்களும் நமக்கு இன்ப அதிர்ச்சியாக, வழித்தடத்தை நீட்டித்து கொடுக்காமல், நம்முடைய ஊருக்கு புதியதாக 56 PA என்ற புதிய வழித்தடத்தையே உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள். என்பது நம் வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டிய ஒரு மகிழ்ச்சி தானே, இதை மகிழ்ச்சியாக நாம் கொண்டாட முடியவில்லையே என்றும், எனக்கு நிகழ்ச்சி ஏதும் நடத்த முடியவில்லையே என்றும் வருத்தம் இருந்தாலும், நமது ஊருக்கு பேருந்து வந்தது பெறும் மகிழ்ச்சியாக இருந்தது.


ஆனால், இந்த பேருந்து புதிதாக வந்ததற்கு, அதிகாரிகள் தரப்பிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் அன்பு சகோதரர், வல்லூர் ரமேஷ் அவர்களும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் எந்த விதமான நிகழ்ச்சியோ மற்ற கொண்டாட்டங்களோ நடத்தக்கூடாது என விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளிடம் அறிவுரை வழங்கியதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எந்த நிகழ்ச்சியும் செய்ய வேண்டாம் என இருந்து விட்டோம்.
உண்மை சம்பவம் இப்படி இருக்க, இதை ஏதும் அறியாத சகோதரர்கள் சிலர், என்னை போன்றே நமது ஊருக்கு பேருந்து வசதி செய்ய வேண்டும் என முடிவு செய்து, கிராம சபை கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பிறகு, ஜனவரி மாதத்திற்கு மேல், அதற்கான முயற்சிளை செய்திருக்கிறார்கள். அது நல்ல விஷயம் தான், அவர்களுக்கு பாராட்டுக்கள், இருந்தாலும் அவர்கள் கோரிக்கை வைத்தது, விழுப்புரம் கோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும், நம்முடைய ஊருக்கு ஏற்கனவே வந்து கொண்டிருந்த 95 D பேருந்து வேண்டும் எனவும், அல்லது மினி பஸ் வேண்டும் எனவும் மனு வழங்கியிருக்கிறார்கள் என்பது, அவர்கள் வைத்த பேனரில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். இருந்தாலும், முயற்சி செய்ததற்கு மகிழ்ச்சிதான்.


இந்த சூழ்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அரசியலுக்காக பேருந்து கொண்டு வந்ததாக கூறிக்கொண்டு மகிழ்ச்சியடையும் சகோதரர்கள், நம்ம ஊருக்கு பேருந்து வந்ததை கொண்டாடுங்கள் தவறில்லை, அதே காரணத்திற்காக பணி செய்த வேறு ஒருவனை தரக்குறைவாக பேசிக்கொண்டும், சில தகாத செயல்களை செய்து கொண்டும் இருப்பது மிகவும் தவறு, முதலில் நாகரீகமாக பேசி பழகுங்கள், ” நாங்கள் முயற்சி செய்த இதே வேலையை, நீங்கள் எங்களுக்கு முன்பாக இருந்து செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை கேள்விப்பட்டோம், மகிழ்ச்சி, என்று உங்களில் ஒருவரும் இதுவரை என்னிடம் பேசவில்லை, தரம் தாழ்ந்து செயல்படுவதால் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.



மேலும், ஒன்றை உங்களிடம் சொல்ல நினைக்கின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக, பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பெண்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்து நடவடிக்கை மேற்கொண்டேன். அதற்காக, நமது முன்னாள் மாவட்ட ஆட்சியர்கள் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் அவர்கள் மற்றும் பிரபு சங்கர் அவர்கள் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அவர்களும் எனக்கு பனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, பெரும் அளவிற்கு எனக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். அதன் மூலமாக, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நமது திருவள்ளூர் மாவட்டத்தில் பனைவிதை வங்கி என்ற ஒரு அமைப்பை துவக்கி, அதை நமது திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி கொண்டிருக்கிறேன்.


மேலும், நமது தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் பனை சார்ந்து என்னுடைய செயல்பாட்டை பாராட்டியதுடன், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அளவில் பெண்களை ஒருங்கிணைத்து பனை ஓலை பயிற்சி அளிப்பதற்கு திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார். அந்த திட்டத்திற்கு நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறேன். அதன் மூலம் பயிற்சி திட்டம் முதன் முதலில் கடம்பத்தூரில் நமது மாவட்ட ஆட்சியர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இரண்டாவது பயிற்சி மையமாக நமது ஊரில் நடத்த வேண்டும் என நான் அவர்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டதன் மூலம், நமது ஊரில் ஒரு பயிற்சி மையத்தை துவக்கி இருக்கிறேன்.
அந்த பயிற்சியின் மூலமாக நமது ஊரில் இருக்கக்கூடிய பெண்கள் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கு பயிற்சி பெற்று, அவர்கள் வீட்டில் இருந்தே அந்த பொருட்களை செய்து, சுயமாக வருவாய் பெற்று, தற்சார்பு பொருளாதார வசதியை பெற செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.


அதற்காக, நமது ஊரில் இருக்கக்கூடிய பெண்கள் இந்த பயிற்சியில் இணைத்து விடுமாறு நமது ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஊராட்சி செயலாளர் மற்றும் பல மக்கள் பிரதிநிதிகளிடம் இந்த தகவலை சொல்லி, நமது ஊரில் உள்ள பல புரட்சியாளர்கள், போராளிகள் அனைவருக்கும் இந்த தகவலை தெரியப்படுத்தியும், இப்போது மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களும், மக்கள் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்று துடிப்பவர்களும் ஒருவரை கூட அந்த பயிற்சியில் இணைத்து விடவில்லை என்பதுதான் உண்மை, இந்த குரல் பதிவு போட்டுக் கொண்டிருக்கும் போராளிகள் எல்லாம் எங்கே போய் இருந்தார்கள் என்று தான் தெரியவில்லை.
இந்த பயிற்சி மைய பணியில் வந்து இப்படி குறுக்கு சால் ஓட்ட முடியாது. ஆகவே, தான் பயிற்சி நடைபெறும் அந்த சமுதாயக்கூடம் பக்கம் கூட யாரும் இதுவரை எட்டி கூட பார்க்கவில்லை.


சரி, ஒரு முக்கியமான தகவலை சொல்லிவிட்டு முடித்து கொள்கிறேன். நமது அனுப்பம்பட்டு கிராமத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் போராட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்று நினைக்கும் அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை முன் வைக்கிறேன். நமது அனுப்பம்பட்டு முத்தாலம்மன் கோயில் நிலத்தின் பிரச்சனையை, நமது ஊரில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் நன்கு அறிந்த ஒரு விஷயம்தான், குரல் பதிவு போட்ட சிங்கக்குட்டி தம்பிகளையும், மக்கள் பிரதிநிதிகளாக இருக்க கூடியவர்களையும், மக்கள் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்று துடிப்பவர்களையும் நான் அன்போடு அழைக்கின்றேன், நமது முத்தாலம்மன் கோயில் பிரச்சனையை வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் வரக்கூடிய மே 2 ம் தேதி நாம் முத்தாலம்மன் கோயில் முன்பாக கூடி, கலந்துரையாடல் நடத்துவோம் அல்லது விவாதிப்போம், அதற்கு, வரிந்து கட்டிக்கொண்டு, வீர நடை போட்டு வாருங்கள் சிங்கங்களே…

நான், காத்திருக்கிறேன்… P.G. பாலகிருஷ்ணன் / 8939476777
