கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(70), வளைகுடா நாட்டில் போர் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவிய நிலையில், ஆறுமுகம் தனது வீட்டில் 10 லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வைத்துள்ளார்.
இந்த பெட்ரோலை அருகில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததை கவனிக்காமல், ஒரு சிறிய பாட்டிலில் மாற்றுவதற்க்கு முயன்ற போது திடீரென பெட்ரோல் தீ பற்றி எரிந்தது. இதில் ஆறுமுகம் அவரது மனைவி தேவகி, மகன் தணிகாசலம் ஆகிய மூன்று பேரும் தீக்காயம் அடைந்து அலறி சத்தம் போட்டனர்.

இதனை அறிந்த, அக்கம்பக்கத்தினர் உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர் காயமடைந்த மூவரையும் மிட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்,
பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெட்ரோல் திடீரென தீப்பற்றிய எரிந்து மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிரொலி / 8939476777
