இரவு முழுவதும் மின் வயர்களை சரி செய்த மின்சார பணியாளர்கள், போக்குவரத்து பாதிப்பால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் சேர்ந்து பயங்கர சத்தத்துடன் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சோழவந்தான் பேட்டை பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் வைகை ஆற்றின் கரையில் இருந்த மரம் சாலையின் குறுக்கே மின்கம்பங்களின் மீது விழுந்தது மின் கம்பங்கள் கீழே சாய்ந்ததில் சோழவந்தான் பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது
மேலும் பெரிய மரம் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்து பொதுமக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் மின்சார வயிர்கள் அருந்து கீழே ஆபத்தான நிலையில் கிடந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர்.

குறிப்பாக மதுரை திருமங்கலம் போன்ற பகுதிகளில் பணிகளுக்கு சென்று பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கார்களில் இரவில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். சோழவந்தானிலிருந்து கருப்பட்டி செல்லக்கூடிய முக்கிய சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் கரட்டுப்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள்
மற்றும் அந்த வழியாக வத்தலகுண்டு கொடைரோடு திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு செல்லக்கூடியவர்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுமார் 7 மணி முதல் 9 மணி வரை தொடர் மழை காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி பேட்டை ஒன்னாவது மற்றும் இரண்டாவது வார்டு பகுதி ஆகியவற்றில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள் கீழே சாய்ந்து ஆபத்தான நிலையில் கிடந்ததால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் இருந்தனர்.

தகவல் அறிந்து சோழவந்தான் மின்சார துறையினர் மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்த பகுதிகளுக்கு சென்று உடனடியாக மின்கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர் சுமார் 3 மணி நேர பணிகளுக்கு பிறகு சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு சிறிது சிறிதாக மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்
இருந்த போதும் சோழவந்தான் பேட்டை முதலியார் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு மின்கம்பங்கள் சாய்ந்தும் மரங்கள் சாய்ந்தும் சாலைகள் மற்றும் தெருக்களில் கிடந்ததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். இதுகுறித்து, அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில் அரை மணி நேரம் இடியுடன் கூடிய மழைக்கே மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து பொது மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியது இதுவே மழைக்காலங்கள் தொடங்கி விட்டால் உயிர் சேதம் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்

ஆகையால் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். மின்கம்பங்களை பாதுகாப்பான வழித்தடங்களில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். சோழவந்தான் பேட்டை மற்றும் முதலியார் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வருவது சிரமம் என பொதுமக்கள் மத்தியில் கூறப்பட்டது.

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777
