இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், இயங்கி வரக்கூடிய மாநில அளவிலான பத்திரிகையாளர் சங்கங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் (IJU) என்ற அகில இந்திய தலைமை சங்கம் டெல்லியில் இயங்கி வருகிறது.

அந்த, அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகளில் இரண்டு அல்லது மூன்று பேரை, ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், “பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ” வில் உறுப்பினர்களாக சேர்த்து இந்திய அளவில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்களுடைய பிரச்சினைகளை நேரடியாக தலையிட்டு, விசாரணை செய்து அதன் மூலம் சட்ட நடவடிக்கைகளும் எடுத்து, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், பல உதவிகளையும் செய்து வரக்கூடிய வாய்ப்பை பெற்று வருகிறது.

இந் நிலையில், அகில இந்திய பத்திரிகையாளர்களுடைய தேசியக் குழு உறுப்பினர்களின் 10 வது மாநாடு, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

தற்போது, 11 வது மாநாடு, வரும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில், ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் நடைபெற உள்ளது !

அதன்படி, அந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டி அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களிடம் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டது அதன் அடிப்படையில், ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு அவர்கள் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் வரவழைத்து மாநாடு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து, அகில இந்திய நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்தினார்.

ஆந்திராவில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய உறுப்பினர்களின் 11 வது மாநில மாநாட்டில், தமிழ்நாட்டில் இயங்கி வரக்கூடிய, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TUJ) தேசிய குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed