உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கேண்டல் பவுண்டேஷன் சார்பில் கிருஷ்ணகிரி லிட்டில் ஹார்ட் மனநல காப்பகம் வளாகத்தில் 30 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் துணை ஆட்சியர் முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


நிகழ்வில் கேண்டல் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.ஜி. ஜாய், நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் கௌரவத் தலைவர் சுரேஷ்குமார், லிட்டில் ஹார்ட் மனநல காப்பக பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களது உறுதிமொழியை வெளிப்படுத்தினர்.
பூமியின் வளங்களை பாதுகாத்து, வருங்கால தலைமுறைகளுக்கு பசுமையான சூழலை வழங்கும் நோக்கில் இதுபோன்ற மரக்கன்று நடவு திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும் அமைந்தது.

“மரம் வளர்ப்போம் – வளம் பெருப்போம், சுற்றுச்சூழலை காப்போம்” என்ற முழக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
