தமிழ்நாட்டில், தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பிறகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவருடைய ஆலோசனையின் பேரில், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், முதல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.


அதில், தமிழ்நாடு முழுவதும் இந்த துறையின் கீழ் நடைபெற்று வரக்கூடிய திட்டங்கள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், மற்றும் அரசு கூடுதல் செயலாளர் வளர்மதி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சமூக நல இயக்குனர் மகேஸ்வரி ரவிக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா, சமூக நல கூடுதல் இயக்குனர் ஷரண்யா அறி, மற்றும் அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


செய்திகள் : லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777
