தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட தொழிற் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சந்தைக்கடை பகுதியில் நடைபெற்றது.
ஏஐடியுசி செயலாளர் என். எஸ். பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு சிஐடியு தி ராஜா முன்னிலை வகித்தார்.
சிஐடியூ வி .காசிநாததுரை, ஐஎன்டியூசி வழக்கறிஞர் சரவணன் காந்தி, விவசாய சங்கத்தின் தலைவர் கே ஜீவானந்தம், கே ஆர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

போராடி பெற்ற தொழிற் சங்க உரிமைகளை பறிக்கும் பாஜக அரசைக் கண்டித்தும், மக்களின் சொத்தான பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை கைவிடக் கோரியும், தொழிலாளர் உரிமைக்கான 44 சட்டங்களை நான்காக சுறுக்கி அனைத்து தொழிலாளர் உரிமைகளையும் நீர்த்துப் போகும் வகையில் புதிய சட்டத்தை இயற்றிய மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

ஐஎன்டியூசி கோதண்டராமன், ராமச்சந்திரன், சிஐடியு முரளிதரன் தி. ப. மோதிலால், முனியசாமி, தொமுச முத்து, சுப்பிரமணியன் மற்றும் வைத்தியர் டி.கே. பலராமன் உள்பட தொழிற்சங்கத்தினர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
