கிருஷ்ணகிரியில், குழந்தை திருமணம்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது, இதில் குழந்தை திருமணத்தை தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் RWDT (கிராமிய பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை இணைந்து) குழந்தை திருமணம் இல்லாத இந்தியா- மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவோம்” என்னும் கோஷசத்துடன் விழிப்புணர்வு வேன் பிரச்சாரம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற இந்த விழிப்புணர்வு பிராச்சாரத்தின் போது, கிருஷ்ணகிரி குழந்தைகள் நல குழும அலுவலகத்தில் இருந்து குழந்தைகள் நல குழு தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது மாவட்ட குழந்தைகள் நல குழும உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சிறார் நீதி குழும உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் குழந்தை திருமணம் செய்தால் தண்டனை உண்டு என்றும், ஒவ்வொரு குழந்தையையும் 18 வயது வரை அவசியம் கல்வி கற்க செய்ய வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வேன் பிரச்சாரம் மூலம் கொண்டு செல்லப்பட்டது .

இந்த விழிப்புணர்வு வேன் பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் 20 நாட்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளர் : மாருதி – மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *