மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவதானம் ஊராட்சியில் உள்ளது கவரப்பாளையம் கிராமம், அந்த பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு இருக்கக்கூடிய பழைய கிருஷ்ணர் கோயிலை இடித்து விட்டு, புதியதாக கட்டி வருகிறோம். ஆகவே, புதியதாக அமைக்க கூடிய சிமெண்ட் சாலையை அந்த கோயிலின் முன்புறம் இருந்து துவைக்கினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் வைத்திருக்கின்றனர். ஆனால், அந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர்கள், சரி அதே போல சாலை அமைத்து தருகிறோம். என உறுதியளித்து விட்டு, இறுதில் கோயிலுக்கு முன்பாக ஒரு 40 மீட்டர் இடைவெளி வரை சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர்.

இதுகுறித்து, அந்த கிராம மக்கள் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டதற்கு, எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை அளவிற்கு நாங்கள் சாலை அமைத்து விட்டோம், இந்த 40 மீட்டர் சாலை அமைப்பதற்கு இப்போது முடியாது, என உறுதியாக கூறிவிட்டனர்.

அதனால், அந்த கிராம மக்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் தலைமை பொறியாளர் ராஜவேலு அவர்களை நேரில் சந்தித்து, தங்கள் கிராமத்தில் ஒப்பந்ததாரர்கள் சாலையை முழுமையாக போடாதது குறித்தும், தங்கள் கிராமத்தில் இருக்க கூடிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள சூழ்நிலையையும் எடுத்துரைத்ததற்கு பின், அவர் உடனடியாக அந்த 40 மீட்டர் சாலை அமைப்பதற்கு, பொது நிதியிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, அந்த 40 மீட்டர் சாலையை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, மணிகண்டன் என்ற பொறியாளர் நேரில் வந்து அந்த சாலையை ஆய்வு செய்தும், அளவீடு செய்தும் சென்றுள்ளார்.

ஆனால், அந்த கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலின் திருப்பணிகள் நிறைவடைந்து வருகின்ற 22 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று வரை அந்த புதிய சிமெண்ட் சாலையை முழுமையாக அமைத்து கொடுக்காததால் அந்த கிராம மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

எதிரொலி / 8939476777
