ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்
சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். நேற்று மதுரை அருங்காட்சியகத்துக்கு வந்து விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தனர். துபே சகோதரர்கள் இருவரும் உலக அமைதிக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5,000 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

டிசம்பர் 25 காஷ்மீரில் புறப்பட்ட இவர்கள் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் இன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு
வருகை புரிந்து காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வந்தே மாதரம் கோஷம் எழுப்பி பயணத்தை நிறைவு செய்தனர். மதுரை வந்த அவர்களை அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனரும் மற்றும் பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனருமான நெல்லை பாலு ஆகியோர் இருவரையும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஆனந்த துபே செய்தியாளர்களிடம் கூறும்போது: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் இடங்களில் எல்லாம் எல்லாம் மரங்கள் வளர்க்க வலியுறுத்தியும், மரங்களை வளர்ப்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும், சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் இருக்கும், மழை பொழியும் என்றனர். தொடர்ந்து பேசிய அவர்கள் நமது இந்திய திருநாட்டில் 21 நதிகளுடைய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாறுபாடு காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாகவும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு பாரத பிரதமர் மோடி அவர்களால் கொண்டுவரப்பட்ட ஜல்ஜீவன் மிஷன் என்கிற திட்டம் ஒரு சிறப்பான நீர் மேலாண்மைக்கான திட்டமாக பார்க்கிறோம் என்றனர்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி சென்று விவேகானந்தரை பார்த்த போது ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டதாக கூறினர்.
அதோடு இந்த சைக்கிள் பயணத்தால் 15 கிலோ உடல் எடை குறைந்ததாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினர்.
மதுரை செய்தியாளர் : காளமேகம் / எதிரொலி / 8939476777
