மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில், மதுரை கோட்ட ரயில்வே பயணிகள் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
   
கூட்டத்திற்கு, கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமை தாங்கினார்.
     
கூட்டத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனியின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ. ஜெய்னுல் ஆலம் உரையாற்றிய போது வலியுறுத்தி கூறியதாவது :
       
வரும் செப்டம்பர் மாதம் முதல் சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
      
இந்த நிலையில் , வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ்கனி எம்பி உள்ளிட்டவர்கள் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை கொடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து வணிகர்கள் அதிகமாக பயணம் செய்யும் பகுதியாகவும்.அதிக வருவாயை வழங்கும் பரமக்குடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஹூப்ளி ராமேஸ்வரம் சிறப்பு ரயிலை நிரந்தரம் ஆக்க வேண்டும் மேலும் ஹூப்ளி ராமேஸ்வரம் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலை புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டத்தை மீண்டும் சர்வே செய்து தூத்துக்குடி. சாயல்குடி. கீழக்கரை. தொண்டி வழியாக புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பாம்பன் ரயில் பாலத்தின் மாதிரியை மண்டபம் ரயில் நிலையத்தின் எதிர்த்திசையில் காட்சிப்படுத்தி சிறிய அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed