ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவை சேர்ந்தவர்காளீஸ்வரி இவரது மகன் ஜெகநாதன் (வயது 31) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ஜெகநாதன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறி அவரது தாயார் காளீஸ்வரி அப்பகுதியில் உள்ள பெண்களிடம் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக, விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஸ்ரீவில்லிபுத்துறை சேர்ந்த பெண்கள்ஜெகநாதன் அவரது மனைவி பொன் லட்சுமி, தாயார் காளீஸ்வரி மீது புகார் செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஜெகநாதனின் குடும்பத்தினர் பற்றி விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், ஜெகநாதன் தனது மனைவியை விட்டு விட்டு கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி உள்ளார். நந்தினி ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் திடீரென அச்சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே பக்கத்தில் இருந்தவர்கள் என்ன என்று விசாரித்த போது, குழந்தை கீழே விழுந்து விட்டார் எனக்கூறி ஜெகநாதனும் நந்தினியும் விருதுநகர்அரசு மருத்துவமனையில் அக்குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை அளித்த டாக்டர்கள் சந்தேகம் ஏற்படவே குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன் நந்தினியும், ஜெகநாதனும் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் அக்குழந்தையை நந்தினியின் தாயாரும், சகோதரியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது உடனிருந்து கவனித்துக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து, குழந்தைகள் நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவலின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட ஸ்ரீவல்லிபுத்தூர் நகர் போலீசார் சிறுமிக்கு ஜெகநாதன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமியை தாக்கியதாகவும், ஜெகநாதன் மற்றும் நந்தினி மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை தெரிந்த இரண்டு பேரும் ராஜஸ்தான் பகுதிக்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்தனர்.

அதனால், ஸ்ரீ வில்லி புத்தூர் போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஜெகநாதனையும் நந்தினி வந்தனர், எதற்கிடையே அவர்கள் ராஜஸ்தானில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, அவர்களை ராஜஸ்தானில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், விசாரணைக்காக அவர்கள் இருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வந்தனர். இந்நிலையில், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஊரணி பட்டி தெருவில் உள்ள காளீஸ்வரி வீட்டில் சோதனை செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் ; தேவதர்ஷினி /. எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *