திஸ்பூர்: அசாமில் கௌரவ் கோகோயின் “ஹிமந்தா யார்?” என்ற கேள்வி, அங்கு அரசியல் அரங்கில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவரது தந்தை தருண் கோகோயின் 2011ஆம் ஆண்டு புகழ்பெற்ற வியூகத்தை நினைவுபடுத்துகிறது. இன்றைய சூழலில், வெறும் அடையாள அரசியலை மட்டும் வைத்து கொண்டு ஆழமான அமைப்பு பலம் மற்றும் நிர்வாகத் திறனுடன் செயல்படும் தற்போதைய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.
அசாம் அரசியல் அசாமின் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரும், வழக்கறிஞரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய், 2020 நவம்பர் 23 அன்று தனது 84 வயதில் காலமானார். கொரோனா பாதிப்பு மற்றும் அதற்கு பிந்தைய சிக்கல்களால் ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு காரணமாக, கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். அவரது 2011ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கேள்விக்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளில், அசாமின் அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது. இப்போது அவரது மகன் கௌரவ் கோகோய் அதேபோல ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.. இது காங்கிரஸின் தற்போதைய தேர்தல் உத்தியைக் காட்டுகிறது.. 2011 தேர்தல் 2011 சட்டமன்றத் தேர்தலில், மௌலானா பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான AIUDF வளர்ந்து வரும் சக்தியாக இருந்தபோது, அப்போதைய முதல்வர் தருண் கோகோயின், “பத்ருதீன் அஜ்மல் யார்?” என்ற கேள்வி வாக்காளர்களிடம் பரவலாக எதிரொலித்து, காங்கிரஸின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியது.
