சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, தற்போது திமுகவில் இணைந்துள்ள வைத்திலிங்கத்திற்கு வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் களம் காண மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்திலிங்கம் டெல்டா மாவட்டத்துக்காரர் என்பதால் அவரை சோழ மண்டலத்து தளபதி என அதிமுகவினர் அழைத்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அவரது அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டாவில் வலம் வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் அதிமுகவில் இரட்டை தலைமை என்ற நிலை உருவானது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவியேற்றனர். இதையடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பேச்சு எழுந்த போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வைத்திலிங்கம் செயல்பட்டார். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் எல்லாம் நீக்கப்பட்டனர். அவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர். இந்த நிலையில் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ஐயப்பன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கினார்.

இரட்டை தலைமை அதை வைத்து அதிமுகவுக்கு இரட்டை தலைமை வேண்டும் என்றும் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சித்து வந்த வைத்திலிங்கமும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed