செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் இருக்கும், அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருக்கோயில் 61-வது தீமிதி திருவிழா மிக விமர்சியாக நடைபெற்று வருகிறது.

செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில், பர்மா தமிழர்களால் நிறுவப்பட்ட, அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி திருகோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், தீமிதி திருவிழாவாக நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டும் 61 வது ஆண்டு தீமிதி திருவிழா மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவக்கப்பட்ட திருவிழா செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பகுதி மக்கள் உபயதாரர்களாக இருந்து தொடர்ந்து 12 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

அதில், இந்த கோயில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து கோவிலின் நிர்வாகத்தில் இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட ஒரே ஒரு பெண், பாப்பம்மாள் என்பவர் ஆவார். இவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கி வழிநடத்திய இந்திய தேசிய படையில் இணைந்து பணியாற்றியவர். அவர் இந்த கோயிலின் நிர்வாகத்தில் இருந்ததுடன், காமராஜர் நகர் பகுதியின் உபயோதாரராகவும் இருந்து, 12 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏழாவது நாள் உபயதாரர்கராகவும் இவர் இருந்து மிகச் சிறப்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டார்.

அவர் மறைவிற்கு பிறகு காமராஜர் நகர் பகுதியின் ஏழாவது நாள் உபயதாரராக, அவரின் பேரனும், செங்குன்றம் பேரூராட்சியின் 4 வது வார்டு கவுன்சிலருமான கார்த்திக் கோடீஸ்வரன் முன் நின்று, இந்த ஏழாவது நாள் உபயத்தை, அப்பகுதி மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவின் ஏழாவது நாள் உபயத்தை கார்த்திக் கோடீஸ்வரன் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அதில், பேண்ட் வாத்தியம் முழங்க, குதிரை பரிவாரங்களுடன், கரகாட்டம், ஒயிலாட்டம், போன்றவைகளுடன் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னே செல்ல, 251 பெண்கள் அம்மனுக்கு ஆடை, ஆபரணங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் உட்பட மற்றும் நூற்றுக்கணக்கான பல வகை பழங்கள் அடங்கிய 251 வரிசை தட்டுக்களுடன் பெண்கள் காமராஜர் நகர் பகுதியில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளூர் சாலை சந்திப்பு வழியாக கோயிலை வந்து அடைந்தனர்.

ஊர்வலமாக வந்த இளைஞர்கள் மற்றும் வரிசை தட்டுகளை எடுத்து வந்த பெண்களை ஆலய நிர்வாகத்தின் சார்பில், நிர்வாகிகள் முன் நின்று வரவேற்று உபசரித்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த பட்டுப்புடவைகளை அம்மனுக்கு சாத்தி அலங்கரிக்கப்பட்டு பின்னர் அப்பகுதி மக்கள் மீண்டும் அம்மனை பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கள் பகுதிக்கு ஊர்வலமாக சென்று வீடு, வீடாக ஆரத்தி எடுத்து வணங்கினர்.

அப்பகுதியில் உள்ள அனைத்து தெருக்களின் வழியாக அம்மன் வீதி உலா வந்து அனைவருக்கும் காட்சியளித்தார். அதிகாலை 4 மணி அளவில் அம்மனை மீண்டும் ஆலயத்தில் அப்பகுதி மக்கள் கொண்டு சேர்த்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed